கேட்போர்கூடத்தினை முன்பதிவுசெய்தல்
ரொபட் குணவர்தன ஞாபகாரத்த மாநாட்டு மண்டபத்திற்கான முன்பதிவு
- கேட்போர்கூடம் கட்டணம் அறவிடப்படும் அடிப்படையில் காலை 8:00 மணி வரை. 05.00 வரை மாத்திரமே வழங்கப்படுகின்றது.
- வளிச்சீராக்கி (குளிரூட்டப்பட்ட)வசதிகளுடன் ரூ. 30,000.00
- வளிச்சீராக்கி வசதிகள் இல்லாமல் ரூ.10,000.00
- ஒலிபெருக்கி இயந்திர வசதிகள் ரூ.5,000.00
- ஒத்திகைக்காக ஒரு மணி நேரத்திற்கு
- வளிச்சீராக்கி வசதிகளுடன் ரூ.2,500.00
வளிச்சீராக்கி வசதிகள் இல்லாமல் ரூ. 1,000.00 (மேற்படி கட்டணங்களுக்கு மேலதிகமாக அரசினால் விதிக்கப்பட்டுள்ள வரியும்அறவிடப்படும்)
ஒதுக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு மாநாட்டு மண்டபத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அல்லது ஒரு பகுதிக்கும் கட்டணமாக ரு.2500.00 / அறவிடப்படும்.
- இந்த மண்டபம் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்த மண்டபம் கடுவெல மாநகரசபையின் அத்தியாவசிய சந்தர்ப்பங்களுக்காக அல்லது அரச விழாவிற்காக தேவைப்படுமிடத்து பதிவு இரத்துசெய்யப்படும்.
திருப்பிச் செலுத்தக்கூடிய வைப்பு
- பொருட்களுக்கு ஏற்படக்கூடிய சேதத்திற்கு ரூ.15,000 வைப்பு பெற்றுக்கொள்ளப்படும் (எந்த சேதமும் இல்லையென பொறுப்பாளர் உறுதிசெய்த பிறகு இது திருப்பித் தரப்படும்.)
மேலதிக நேரத்திற்கான வைப்பு ரூ. 5,000.00 ஆகும். (மேலதிகமாக நேரம் எடுக்கப்படாவிட்டால் இத் தொகை திருப்பித் தரப்படும்.)
இப் பணத்தைப் பெறுவதற்கு பணம் வைப்புசெய்யப்பட்டதற்கான பற்றுச்சீட்டின் மூலப்பிரதி சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
- இந்த மண்டபத்தில் 250 இருக்கைகள் உள்ளன.
- சுவரில் பசை ஒட்டக் கூடாது. (சுவருக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், வைப்புத்தொகையிலிருந்து கழிக்கப்படும்)
- வார நாட்களில் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு இடமளிக்கப்படாது.
- விழாவுக்குப் பிறகு மண்டபத்திற்குள் உக்கிப்போகாத பொருட்களை அகற்றும் விடயம் தவிர்க்கப்படுதல் வேண்டும்.