வணக்கம்
கடுவெல மாநகர சபை ஆளுகைப் பிரதேசம் வடக்கில் களணி ஆற்றினாலும்,கிழக்கில் நாகடமுல்ல கால்வாய்/ திலக தெனிய புறக் கால்வாய் ஆகியவற்றினாலும், தெற்கில் புவக்கஹதெனிய நிலப்பகுதி/ மெதி எல/ பண்டாரதெனிய ஆகிய எல்லைகளினாலும், மேற்கில் இலங்கை – யப்பான நட்புறவு வீதி/தியவன்னா ஒய/ தியவன்னா சதுப்புநிலத்தினாலும் எல்லைக்குட்படுகின்றது.
கடுவெல மாநகர சபை ஆளுகைப் பிரதேசம் மேற்கு மாகாணத்தின் கொழும்பு நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்டதாகும். பரப்பளவினை நோக்குகையில் இலங்கையிலுள்ள மாநகர சபைகளில் முதலாவது இடம் கடுவெல மாநகர சபைக்கு கிடைப்பதுடன் நீர் நிலைகள் உள்ளிட்டதாக மொத்த நிலப்பரப்பின் அளவு 91.76 சதுர கிலோமீற்றர்களாகும். இந்த நிலப்பரப்பு கொழும்பு மாவட்டத்தின் நிலப்பரப்பில்13.1% ஆகும், 2022 ஆம் ஆண்டு நிறைவடைகின்ற போது இப்பிரதேசத்தின் மொத்த சனத்தொகை 281,282 என அறிக்கையிடப்பட்டுள்ளது