சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் பெற்றுக்கொள்ளுதல்
சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தினை வழங்கும் நடைமுறையை முறைசார்ந்த வகையில் மேற்கொள்வதற்கு 2018.02.01 ஆம் திகதிய 1534/18 இலக்கம் கொண்ட வர்த்தமானி அறிவித்தல், 2008 .01.25 ஆம் திகதிய 1533/16 இலக்கம் கொண்ட மற்றும் 19996.05.23 ஆம் திகதிய 924/12 இலக்கம் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் ஆகியவற்றில் உள்ளடங்கியுள்ள ஒழுங்குவிதிகள் மற்றும் 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்கம் மற்றும் 1998 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சட்டம் ஆகியவற்றின் ஊடாக திருத்தப்பட்ட 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கமைவாக அவ்விடயம் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
- புதிய விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பம்
- ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள உரிமத்தை புதுப்பித்தல். (பெற்றுக்கொள்ளப்பட்ட உரிமம் செல்லுபடியற்றதாவதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் புதுப்பித்தல் வேண்டும். அவ்வாறு உரிமம் செல்லுபடியற்றதாகவதற்கு முன்னர் புதுப்பிக்கப்படாத உரிமங்களுக்கு, மீண்டும் ஒரு விண்ணப்படிவம் வாயிலாக கள ஆய்வுக்கு (பரிசோதனைக் கட்டணத்துடன்) உட்பட்டு விண்ணப்பிக்க நேரிடும்.
கள ஆய்வுக் கட்டணம்
- கைத்தொழில் செயன்முறையொன்றுக்கு/குறிப்பிட்டதொரு பணிக்கு ஏதுவான கள ஆய்வுக் கட்டணம் அவ்விடயத்தில் ஈடுபடுத்தப்படுகின்ற அடிப்படை மூலதன முதலீட்டினை அடிப்படையாகக் கொண்டு நிச்சயிக்கப்படும்.
புதிய விண்ணப்படிவத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் நடைமுறை
02.01 ஆம் திகதிய மற்றும் 153/18 ஆம் இலக்கமும் கொண்ட வர்த்தமானி அறிவித்தலின்படி “இ” பிரிவுக்குரிய 25 கைத்தொழில்களுக்கு சுற்றாடல் பாதுகாப்பு உரிமமொன்றை பெற்றுக்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனத்திற்கு விண்ணப்பித்தல் வேண்டும்.
- இதற்கமைவாக புதியதொரு விண்ணப்படிவத்தை கொள்வனவு செய்தல் (கட்டணம் NBT – ரூ. 102.00, VAT – ரு.15.30 மொத்த தொகை = රු. 117.30)
- புதிய விண்ணப்படிவமொன்றை பெற்றுக்கொள்ளும் போது விண்ணப்படிவத்தை பூர்த்திசெய்து பின்வரும் ஆவணங்கள் சகிதம் கையளித்தல் வேண்டும்.
- கைத்தொழில் நிலையம் அமைந்துள்ள இடத்தைக் காட்டும் வீதி வரைபடம்
- வர்த்தக பெயரின் பதிவுச் சான்றிதழ்
- சம்பந்தப்பட்ட பிரதேச சபைக்கு/நகர சபைக்கு வர்த்தக உரிமத்திற்காக பணம் செலுத்தப்பட்டமைக்கான பற்றுச்சிட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைபடத்தின் பிரதி மற்றுடம் இசைவுச் சான்றிதழ் அல்லது வர்த்தகம் (தொழில்முயற்சி) தொடர்பாக பிரதேச சபை/நகர சபையின் எதிர்ப்புகள் எதுவும் இல்லையென்பதை காட்டும் கடிதம்.
- அங்கீகரிக்கப்பட்ட நில அளவைத் திட்டம்
- பொருட்களை சுத்தீகரிப்பு செய்வதற்கான தொகுதி/ வாயு மாசடைதல்/வலி மாசடைதல் ஆகியவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றிய திட்டம்
- தீயணைப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளதற்கான அறி்க்கை
- விண்ணப்படிவத்தை கையளித்த பின்னர் விண்ணப்படிவத்தில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளவாறு முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தொகைக்கு அமைவாக கள ஆய்வுக் கட்டணத்தை செலுத்துதல்
- அதற்கமைவாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களினால் கள ஆய்வுகள் நடாத்தப்படுதல்
- கள ஆய்வினை மேற்கொண்ட கோப்புகளை சுற்றாடல் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவுக்கு சமர்ப்பித்தல்
- (i) சுற்றாடல் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் விதப்புரை செய்யப்படுகின்ற அல்லது விதப்புரை செய்யப்படாத விண்ணப்பப்படிவங்களை நகர ஆணையாளரின், கௌரவ நகர பிதாவின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
(ii) தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் விதப்புரை செய்யப்பட்ட விண்ணப்படிவங்களுக்கான உரிமக் கட்டணம் செலுத்துவதற்கான அறிவித்தல் விடுத்தல் (கட்டணம் + NBT – ரூ. 4080.00, VAT – ரூ.612.00 மொத்த தொகை = ரூ. 4692.00)
(iii) தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் விதப்புரை செய்யப்படாத விண்ணப்பங்கள் சார்ந்த குறைபாடுகளை அறிவித்து அக்குறைபாடுகளை திருத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனம்/ஆளுக்கு அறிவித்தல். அக்குறைபாடுகளை திருத்திக்கொண்ட பின்னர் மீண்டும் கள ஆய்வினை மேற்கொண்டு அல்லது குறைபாடுகள் சிரியவைகளாக இருக்குமாயின் சுற்றாடல் மதிப்பீட்டுகு் குழுவின் அறிவுறுத்தலுக்கமைவாக கடிதமொன்றை சமர்ப்பிப்பதன் மூலம் சுற்றாடல் தொழில்நுட்ப குழுவிற்கு அனுப்புதல். அதன் விதப்புரைகளின் அடிப்படையில் 06 (ii) இற்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
- சுற்றாடல் பாதுகாப்பு உரிமக் கட்டணத்தை செலுத்திய நிறுவனத்திற்கான உரிமத்தை அச்சிட்டு கௌரவ நகரபிதாவின் அங்கீகாரத்திற்கும் கையொப்பத்திற்கும் சமர்ப்பித்தல்
- சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தை வழங்குதல்
உரிமத்தை புதிப்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை
இதற்கமைவாக புதியதொரு விண்ணப்படிவத்தை கொள்வனவு செய்தல் (கட்டணம் + NBT – ரூ. 51.00, VAT – ரு.07.65 மொத்த தொகை = ரூ. 58.65)
புதுப்பிக்கும் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாதிருப்பின் அவற்றுடன் கையளித்தல் வேண்டும்.
- கைத்தொழில் நிலையம் அமைந்துள்ள இடத்தைக் காட்டும் வீதி வரைபடம்
- வர்த்தக பெயரின் பதிவுச் சான்றிதழ்
- சம்பந்தப்பட்ட பிரதேச சபைக்கு/நகர சபைக்கு வர்த்தக உரிமத்திற்காக பணம் செலுத்தப்பட்டமைக்கான பற்றுச்சிட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைபடத்தின் பிரதி மற்றுடம் இசைவுச் சான்றிதழ் அல்லது வர்த்தகம் (தொழில்முயற்சி) தொடர்பாக பிரதேச சபை/நகர சபையின் எதிர்ப்புகள் எதுவும் இல்லையென்பதை காட்டும் கடிதம்.
- அங்கீகரிக்கப்பட்ட நில அளவைத் திட்டம்
- பொருட்களை சுத்தீகரிப்பு செய்வதற்கான தொகுதி/ வாயு மாசடைதல்/வலி மாசடைதல் ஆகியவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றிய திட்டம்
- தீயணைப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளதற்கான அறி்க்கை
4.அதற்கமைவாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களினால் கள ஆய்வுகள் நடாத்தப்படுதல்
- கள ஆய்வினை மேற்கொண்ட கோப்புகளை சுற்றாடல் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவுக்கு சமர்ப்பித்தல்
- (i) சுற்றாடல் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் விதப்புரை செய்யப்படுகின்ற அல்லது விதப்புரை செய்யப்படாத விண்ணப்பப்படிவங்களை நகர ஆணையாளரின், கௌரவ நகர பிதாவின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
(ii) தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் விதப்புரை செய்யப்படாத விண்ணப்படிவங்களுக்கான உரிமக் கட்டணம் செலுத்துவதற்கான அறிவித்தல் விடுத்தல் (கட்டணம் + NBT – ரூ. 4080.00, VAT – ரூ.612.00 மொத்த தொகை = ரூ. 4692.00)
(iii) தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் விதப்புரை செய்யப்படாத விண்ணப்பங்கள் சார்ந்த குறைபாடுகளை அறிவித்து அக்குறைபாடுகளை திருத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனம்/ஆளுக்கு அறிவித்தல். அக்குறைபாடுகளை திருத்திக்கொண்ட பின்னர் மீண்டும் கள ஆய்வினை மேற்கொண்டு அல்லது சிறு குறைபாடுகள் சிரியவைகளாக இருக்குமாயின் சுற்றாடல் தொழில்நுட்ப குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கடிதமொன்றை அனுப்புவதன் மூலம் கள ஆய்வொன்றை நடாத்தாமல் சுற்றாடல் தொழில்நுட்ப குழுவிற்கு அனுப்புதல். அதன் விதப்புரைகளின் அடிப்படையில் 06 (ii) இற்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
- சுற்றாடல் பாதுகாப்பு உரிமக் கட்டணத்தை செலுத்திய நிறுவனத்திற்கான உரிமத்தை அச்சிட்டு கௌரவ நகரபிதாவின் அங்கீகாரத்திற்கும் கையொப்பத்திறகாகவும் சமர்ப்பித்தல்
- சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தை வழங்குதல்.