கட்டிடத் திட்ட வரைபடத்தை அங்கீகரித்தல்
கட்டிடத் திட்ட வரைபடத்திற்கான விண்ணப்பமொன்றை கையளிக்கும் போது:-
- மேற்படி விண்ணப்பத்திலுள்ள அறிவுறுத்தல்களுக்கேற்ப விண்ணப்பத்தை பூர்த்திசெய்தல்.
- வீதவரி பிரிவின் மூலமாக ஆதனத்தின் (கட்டிடத்தின்) உரித்தினை உறுதிசெய்து அவ்விடயத்தைப் பற்றி விண்ணப்பத்தில் குறிப்பொன்றை இடுதல்.
- அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற கட்டிடத் திட்ட வரைபடத்தின் 03 பிரதிகளை சமர்ப்பித்தல். (அளவுத்திட்டம் சரியான முறையில் தயாரிக்கப்பட்ட பின்னர்)
- 10 பர்சஸ் அல்லது அதற்கு மேற்பட்ட காணிகளுக்கான திட்ட வரைபடங்களை சமர்ப்பிக்கும் போது கூட்டுப்பசளை தொட்டியொன்றை வைக்கக்கூடிய இடமொன்று அமைவிடத் திட்ட வரைபடத்தில் காட்டப்பட்டிருத்தல் வேண்டும்.
- அமைவிடத் திட்ட வரைபடத்திற்கு ஏற்புடையதாக்கிக்கொளப்பட்ட காணித் துண்டுத் திட்ட வரைபடத்தின் தெளிவான நிழற்பிரதியொன்று
- கட்டிடத் திட்ட வரைபடத்திற்கு ஏதுவான காணியின் உரித்துறுதியின் நிழற்பிரதியொன்று
- ஆதன உரிமையாளரின் தேசிய அடையாள அட்டையின் நிழற்பிரதி ஆகியவை கையளிக்கப்படுதல் வேண்டும்.
விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
விண்ணப்பப்படிவத்தை பூர்த்திசெய்து உங்களுக்குரிய மாவட்ட அலுவலகத்திற்கு கையளிக்கும் போது விண்ணப்பக் கட்டணம் அறவிடப்படும்.