காணி உபபிரிவிடலை அங்கீகரித்தல்
காணி உபபிரிவிடல் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது…
- காணி உபபிரிவிடல் விண்ணப்பத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பத்தை நிரப்புதல்.
- வீதவரிப் பிரிவில் சொத்தின் உரித்தினை உறுதிப்படுத்தி அதைப்பற்றி விண்ணப்பத்தில் குறிப்பு வைத்தல்.
- தகுதி வாய்ந்த ஆளொருவர் விண்ணப்பத்தை சான்றுப்படுத்துதல். (தகுதிவாய்ந்த நில அளவையாளர் / நகர வடிவமைப்பாளர்)
விண்ணப்பத்துடன்: –
- அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்படும் உபபிரிவிடல் திட்ட வரைபடம் மற்றும் அவ்வாறான அளவுத்திட்டத்தின்படி எடுக்கப்பட்ட மூன்று நிழற்பிரதிகள்
- உபபிரிவிடலுக்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்ட மூலத்திட்டத்தின் நிழற்படம்
- உபபிரிவிடலுக்கு ஏற்புடைய காணியின் உறுதியின் ஒரு நிழற்படம்
- சொத்து உரிமையாளரின் தேசிய அடையாள அட்டையின் நிழற்படம்
- ஆகியவற்றை கையளித்தல் வேண்டும்.
விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்
விண்ணப்பப்படிவத்தை பூர்த்திசெய்து உங்களுடைய மாவட்ட அலுவலகத்திற்கு கையளிக்கும்போது விண்ணப்பப்படிவக் கட்டணம் அறவிடப்படும்.