போதைப்பொருள் தடுப்பு பற்றிய நிகழ்ச்சித்திட்டம் – 2019.07.10
கௌரவ நகரபிதாவின் தலைமையில் கடுவெல மாநகர சபையினால் அத்துருகிரிய மஹாமாத்ய கல்லூரியின் 12ஆம் தரத்தைச் சேர்ந்த 250 மாணவ மாணவிகளுக்கு 2019.07.10 ஆம் திகதி போதைப்பொருள் தடுப்பு பற்றிய நிகழ்ச்சித்திட்டமொன்று நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சி திட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரசபையின் போதைப் பொருள் கல்வி உத்தியோகத்தர் திருமதி மஹேஷி மதுவந்தி அவர்களினால் சொற்பொழிவொன்று ஆற்றப்பட்டது. அத் தினத்தில் கௌரவ மாநகர முதல்வரின் கரங்களினால் ஒரு மரக்கன்றும் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படை நோக்கம் போதைப்பொருள் தொடர்பாக பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டுதல் மற்றும் பிள்ளைகள் அதற்கு ஈர்க்கப்படுவதை தடுப்பதும் ஆகும்.