பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் – 2019.07.20

கடுவெல ஆளுகை பிரதேசத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கும் சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளை இயன்றளவு குறைப்பதற்கும் டெங்கு ஒழிப்பு கருத்திட்டம் மற்றும் கூட்டு பசளை உற்பத்தியினை விரிவாக்கும் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி டெங்கு ஒழிப்பு கருத்திட்டத்துக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 54 ஆகும். கூட்டுப் பசளை தயாரிப்பினை விரிவாக்கும் கருத்திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 44 ஆகும். அமய அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று 2019.07.20 ஆம் திகதி கடுவெல மாநகரசபையின் பிரதான மண்டபத்தில் நடத்தப்பட்டது.