வீட்டுத் தோட்டக்காரர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நிகழ்ச்சித்திட்டம் – 2019.08.07

கடுவெல மாநகர சபையின் ஆளுகைப் பிரதேசத்தில் வீட்டுத் தோட்டக்காரர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2019.08.07 ஆம் திகதி கடுவெல மாநகர சபையின் ரொபட் குணவர்தன ஞாபகார்த்த மண்டபத்தில் கௌரவ நகரபிதாவின் தலைமையில் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. கடுவெல ஆளுகைப் பிரதேசத்தின் 57 பிரிவுகளைச் சேர்ந்த 300 பிரதேசவாசிகள் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றதுடன் இவர்களின் வீட்டுத் தோட்டங்களுக்கான விதைகளும் வழங்கப்பட்டன. எதிர்வரும் காலத்தில் விவசாய உபகரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கின்றது.

இந் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான சொற்பொழிவு சேதனப் பசளை விவசாய கருத்திட்டத்தின் தலைவர் திரு. திலக் காரியவசம் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. இந் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான நோக்கம் வீட்டுத்தோட்டத்தினை பிரபல்யப்படுத்துவதாகும். இதற்கானதொரு வீட்டுத் தோட்ட போட்டியொன்றும் எதிர்காலத்தில் நடத்தப்படவிருக்கின்றது.