கால்நடை மருத்துவப் பிரிவின் சேவைகள்

 • நீர்வெறுப்பு நோயைக் கட்டுப்படுத்துதல்
 • நீர்வெறுப்பு நோய்க்கான தடுப்பூசி.
 • விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்.
 • மலடாக்குவதற்கான அறுவை சிகிச்சை.
 • நாய்களை பதிவுசெய்தல்

தகவல் அறிவிக்கப்பட வேண்டிய நபர் – நகர கால்நடை மருத்துவ அதிகாரி

காலம் – ஆண்டு முழுவதும்

கட்டணம் – இலவசம்

தேவையானவை – நாய் அல்லது பூனையின் தடுப்பூசி பதிவுப் புத்தகம்

வேறு- நீர்வெறுப்பு நோய்க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட நாய்கள், சம்பந்தப்பட்ட பஞ்சாங்க ஆண்டிற்கு கடுவெல மாநகர சபையில்  பதிவு செய்யப்படுதல் வேண்டும். சம்பந்தப்பட்ட திகதியில் பதிவு புதுப்பிக்கப்பட வேண்டும்.

 • வீதிகளில் நிகழுகின்ற தொல்லைகள் – அலைந்து திரியும் மாடுகளினால் வீதிகளில் செய்யப்படுகின்ற தொல்லைகளை இயன்றளவு குறைத்தல்

தகவல் தெரிவிக்க வேண்டிய நபர் – அறிவிக்கப்படவேண்டிய நபர் – நகர கால்நடை மருத்துவ அதிகாரி

காலம் – ஆண்டு முழுவதும்

கட்டணம் – இலவசம்

 • தரநியமங்களுக்கமைவாக மாடு/பன்றி பண்ணைகளை பேணிவருதல்
 • பண்ணைக்கு பஞ்சாங்க ஆண்டிற்கான வருமான அனுமதிப்பத்திரத்தை விநியோகித்தல்.

இடம் – கால்நடை மருத்துவப் பிரிவு

தகவல் அறிவிக்கப்பட வேண்டிய நபர் – நகர  கால்நடை மருத்துவ அதிகாரி

காலம் – ஆண்டு முழுவதும்

தேவையானவை – விண்ணப்படிவம், பிரதேசத்தின் கால்நடை மருத்துவ அலுவலகத்தின் பதிவுச் சான்றிதழ்

 • பால் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பால்சார்ந்த உணவு உற்பத்தி நிலையங்கள் தரநியமங்களுக்கு அமைவாக பேணிவரப்படுதல்.
 • வருமான அனுமதிப்பத்திரத்தை விநியோகித்தல்

இடம் – கால்நடைப் பிரிவு

தகவல் அறிவிக்கப்பட வேண்டிய நபர் – நகர கால்நடை  மருத்துவ அதிகாரி

காலம் – ஆண்டு முழுவதும்

தேவையானவை – விண்ணப்ப படிவம், பால் உற்பத்தி நிலையத்தின் விபரங்கள்

 • தரநியமங்களுக்கமைவாக இறைச்சி விற்பனை நிலையங்களை பேணிவருதல்
 • வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளுதல்

இடம் – கால்டை மருத்துவப் பிரிவு

அறிவிக்கப்பட வேண்டிய நபர் – நகர கால்நடை மருத்துவ அதிகாரி

காலம் – ஆண்டு முழுவதும்

தேவையானவை – விண்ணப்படிவம், சம்பந்தப்பட்ட பஞ்சாங்க ஆண்டிற்காக விநியோகிக்கப்படுவதுடன் ஆண்டிறுதியில் புதுப்பிக்கப்படுதல் வேண்டும்.

வேறு – வருமான அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிராத இறைச்சி விற்பனை நிலையங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.