வர்த்தக உரிமம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுதல்

 1. வர்த்தக உரிமம் வழங்கப்படவேண்டிய நிறுவனங்களிடமிருந்து பூர்த்திசெய்யப்பட்ட சம்பந்தப்பட்ட விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக்கொள்ளுதல்
 2. விண்ணப்பத்தை பொறுப்பேற்றுக்கொள்ளும் போது வர்த்தக உரிமக் கட்டணம் மற்றும் சம்பந்தப்பட்ட வரிப்பணத்தை அறவிட்டுக்கொள்ளுதல்.
 1. சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வர்த்தக உரிமத்தினை வழங்குவது பொறுத்தமானதா என்பதை விதப்புரை செய்வதற்காக வர்த்தக உரிமங்களின் மூலப் பிரதியை மாவட்ட அலுவலரின் காப்புக் கடிதத்துடன் பொது சுகாதார பரிசோதகருக்கு கையளித்தல் (வர்த்தக உரிமத்தின் மூல விண்ணப்படிவ பிரதியையும் காப்புக் கடிதத்தின் பிரதியையும் வர்த்தக நிலையத்திற்குரிய கோப்பில் இடுதல் வேண்டும்.)
 2. பொது சுகாதார பரிசோதகரின் அறிக்கை கிடைத்ததும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வர்த்தக உரிமங்களை வழங்குவது பொருத்தமற்றதென அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையத்திற்கு அதைப் பற்றி அறிவிக்கும் கடிதத்தை அனுப்புதல்
 3. பொருத்தமானதென பரிந்துரைக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட வர்த்தக உரிமத்தினை வழங்குவதற்கு தேவையான தகைமைகளை பூர்த்தி செய்வதற்காக குறைபாடுகளை அறிவிக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்புதல்.

அதற்கமைவாக,

 1. வர்த்தக பதிவுச் சான்றிதழ்
 2. வர்த்தக நிலையம் அமைந்துள்ள காணியின் உறுதி அல்லது குத்தகை பத்திரம்
 3. காணியின் அங்கீகரிக்கப்பட்ட திட்ட வரைபடம்
 4. அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத் திட்ட வரைபடம்
 5. சுற்றாடல் பாதுகாப்பு உரிமமொன்றை பெற்றுக்கொள்ளத் தேவைாயன நிறுவனமாயின் சம்பந்தப்பட்ட உரிமம்
 6. எரிபொருள் நிரப்பு நிலையம் என்றால், அதன் தீ பாதுகாப்பு சான்றிதழ்
 7. மேணி அழகுக்கலை நிலையம் என்றால், சம்பந்தப்பட்ட அழகுக்கலை பாடநெறி சான்றிதழ்
 8. உடலை பிடித்துவிடும் (மசாஜ்) ஆயுர்வேத மருத்துவ நிலையமாயின் ஆயுர்வேத மருத்துவ சபையின் சான்றிதழ்
 9. தங்குமனையாக (லாட்ஜ்) இருப்பின் கழிவு அகற்றும் முறை போன்ற தகவல்களை பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
 • சம்பந்தப்பட்ட குறைபாடுகளை பூர்த்திசெய்து வர்த்தக உரிமத்தை எழுதுவதற்கு விதப்புரை அங்கீகாரத்திற்கு அனுப்புதல்.(இதில் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையத்திற்கேதுவான துணைவிதியின் பந்தியினை குறிப்பிடுதல்)
 • வர்த்தக உரிமத்தினை எழுதுவதற்கான அங்கீகாரம் கிடைத்த பின்னர் வர்த்தக உரிமத்தை தயாரித்து கையொப்பத்திற்கு சமர்ப்பித்தல்