ஆபத்தான மரங்களை அகற்றுதல்

 • ஆபத்தான மரங்களுக்கான விண்ணப்பப்படிவத்தை விநியேர்கித்தல் (கட்டணம் அறவிட்டு)
 • ஆபத்தான மரம் முறைப்பாட்டாளரின் காணியில் இருக்குமாயின் தனிப்பட்ட ரீதியில் மரத்தை வெட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவித்தல் மற்றும் வெட்டுவதற்கு விசேட அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டிய மரங்கள் தொடர்பாக (பலா, ஈரப்பலா,பணை) கிராம அலுவலர் ஊடாக பிரதேச செயலாளரின் அனுமதியுடன் மரத்தை வெட்டுவதற்கு ஆற்றுப்படுத்துதல்
 • பிரதேச செயலாளரின் அனுமதி கிடைத்துள்ள/கிடைக்காத மரங்கள் தொடர்பாக அமைவிடத்தை பார்வையிடுவதற்காக பிரதேசத்திற்கு பொறுப்பான தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு ஆற்றுப்படுத்துதல்.
 • தொழில்நுட்ப உத்தியோகத்தரினால் அமைவிடம் பார்வையிடப்பட்டு வழங்கப்பட்ட அறிக்கையினை மாவட்ட உத்தியேர்கத்தர் ஊடாக நகர பொறியியலாளருக்கு ஆற்றுப்படுத்துதல்.
 • முதலாவது அறிவித்தல் விடுக்கப்பட்டு 14 நாட்களுக்கு பின்னரும் மரத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாதவிடத்து இரண்டாவது அறிவித்தலை அனுப்புதல்
 • முதலாம் மற்றும் இரண்டாம் அறிவித்தல்களுக்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதவிடத்து இறுதி அறிவித்தலை விடுத்தல் (07 நாட்கள்)
 •  07 நாட்களுக்கு பின்னரும் மரம் அகற்றப்படாதவிடத்து சபையின் ஊடாக மரத்தை வெட்டியகற்றுவதற்கு நகரப் பொறியியலாளர் திணைக்களத்திற்கு ஆற்றுப்படுத்துதல்
 • நடப்பு (தற்போதைய) நிலையை தெளிவுபடுத்திக்கொள்வதற்கு தொழில்நுட்ப உத்தியோகத்தரின் அறிக்கையினை பெற்றுக்கொள்ளுதல்
 • பிரதேச மர வெட்டுநர்களிடமிருந்து விலைகளை கோருதல்.
 • மர வெட்டுநர் ஒருவரை தெரிவுசெய்து மரத்தை வெட்டுவதற்கு செலவாகும் பணத்தொகையை குறிப்பிட்டு அப்பணத்தொகையை அறவிட்டுக்கொள்வதற்கு நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்து மரத்தை அகற்றும் திகதியை மர உரிமையாளருக்கு எழுத்து மூலமாக அறிவித்தல்
 • பொலிசாரின் உதவியுடன் மரத்தை வெட்டியகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல்

விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்

விண்ணப்பப்படிவத்தை பூர்த்திசெய்து உங்களுக்குரிய மாவட்ட அலுவலகத்திற்கு கையளிக்கும் போது விண்ணப்பப்படிவக் கட்டணம் அறவிடப்படும்.