கழிவு முகாமைத்துவம்

  • குப்பைக் கூலங்களை சேகரிப்பதற்கான (குப்பைக்கூலங்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் மூன்று மாவட்ட அலுவலகங்களினாலும் தினசரி குப்பைக்கூல சேகரிப்பு அட்டவணைப்படி மேற்கொள்ளப்படுகிறது)
  • தெருக்களை பெருக்கி சுத்தம் செய்தல்.

87.71 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட கடுவெல மாநகர சபை ஆளுகைப் பிரதேசம் கொழும்பு மாவட்டத்தில் துரிதமாக நகரமயமாக்கத்திற்கு உள்ளாகும் ஒரு பிரதேசமாகும். இதற்கு இணையாக, இந்த பிரதேசத்தின் சனத்தொகை வேகமாக அதிகரித்து வருகின்றது. இவ்வாறாக அதிகரிக்கும் சனத்தொகைக்கேற்ப தேவைப்படும் வீடுகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதுடன்  இதன் விளைவாக நகரத்தில் ஏராளமான கழிவுகள் குவிந்துவிடுகின்றன. இதற்கானதொரு தீர்வாக   கடுவெல மாநகர சபையினால் கழிவு முகாமைத்துவ திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. மாநகர சபையினால் நாளொன்றுக்கு 50 முதல் 60 தொன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த கருத்திட்டம் வாயிலாக குப்பைக் கூலத்தை புரட்டுவதற்கான திட்டத்தினை பயன்படுத்தி உரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. நாளொன்றுக்கு சுமார் 10 தொன் குப்பைக்கூலம் உரத்தினை உற்பத்தி செய்யவதற்காக ஈடுபடுத்திக்கொள்ளப்படுகின்றது.

ஆளுகைப் பிரதேசத்தில் மனைசார் கூட்டுப்பசளை தயாரித்தலுக்கு ஏதுவான செயன்முறையும் மிகவும் கிரமமாகவும் ஒழுங்குமுறையாகவும்  இடம்பெறுகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தினை பெருமளவு பிரபல்யப்படுத்துவதற்கு மாநகர சபையினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவைகளாவன,

  • ஆண்டொன்றிற்கு மனைசார் கூட்டுப்பசளை தயாரிப்பதற்கு தேவையான 200 கொள்கலன்களை வழங்குதல்
  • கூட்டுப்பசளை உற்பத்தியின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் மக்களுக்கு தெளிவுபடுத்துதல்
  • மனைசார் உரத்தை உற்பத்திசெய்வதற்கு தேவையான அறிவினை ஆளுகைப் பிரதேசத்தின் மக்களுக்கு வழங்குதல்
  • மனைசார் உக்கிப்போகாத பொருட்களை சேகரித்து பெற்றுக்கொள்ளுதல்
  • கழிவுகளை வகைப்படுத்தும் முறைக்கு பழக்கப்படுத்துவதற்கு கிறீன் பகட் (பச்சை தொட்டி) கருத்திட்டம் மற்றும் பொலிசெக் உறைகளை இலவசமாக வழங்குதல்
  • இந்த செயன்முறை தொடர்பாக மேலும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுதல் மற்றும் வீடுகளுக்கு சென்று பின்னாய்வு செய்தல்