கடுவல மாநகர சபை 2019 ஜனவரி 1

புத்தாண்டை – புதிய தோரணையில் – புதிதாக தொடங்குவதற்கு

2019 ஆம் ஆண்டிற்கான கடமை பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்விற்கு சமாந்தரமாக பல சமுதாய சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.

  1. கௌரவ நகர பிதாவிற்கான உத்தியோகபூர்வ வாகனத்தை அவர் பெற்றுக்கொள்ளாமல் சேமித்த பணத்தைக்கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட 06 ட்ரெய்லர் உடன் கூடிய ட்ரெக்டர் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்துதல்.
  2. ஏல விற்பனை செய்யப்படவிருந்த 5 ட்ரக்டர் வண்டிகளை குறைந்த செலவில் முழுமையாக பழுது பார்க்கப்பட்ட பின்னர் சேவையில் ஈடுபடுத்துதல்.
  3. குப்பைக் கூளங்களை சேகரிக்கும் செயன்முறையை வினைத்திறன்மிக்க வகையில் மேற்கொள்வதற்கு தொழில்நுட்ப சாதனங்களை பயன் படுத்தும் முறையினை ஆரம்பித்தல் (CLEAN ME APP)
  4. செயலிழந்து காணப்பட்ட கடுவல மாநகரசபையின் இணையத்தளத்தை மீள செயற்படுத்துதல்
  5. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை பிள்ளைகளுக்கு இலவசமாக பாதணிகளை வழங்குதல்
  6. 2009 கொழும்பு மாவட்ட அரச சேவை விளையாட்டு வைபத்தில் வலைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற கடுவெல மாநகரசபை அணியை பாராட்டுதல் மற்றும் பரிசில்களை வழங்குதல்
  7. புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட 54 ஆசனங்களைக் கொண்ட பேருந்தை மூத்த பிரசைகளுக்கு ஒரு நாள் சுற்றுலாப் பயணத்திற்கு வழங்குதல்
  8. புதுப்பிக்கப்பட்ட அலுவலக ஆவணக் கூடத்தை ஊழியர்களின் பாவனைக்கு கையளித்தல்
  9. வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கான இடைத்தங்கல் முகாம்களுக்கு உணவு சமைப்பதற்கான உபகரணங்களை சம்பந்தப்பட்ட சனசமூக குழுக்களுக்கு வழங்குதல்
  10. பூர்த்தி செய்யப்படாத வீடுகளுக்கான பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்குதல்
  11. பெற்றோரை இழந்த பாடசாலை மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில்களை வழங்குதல்