நகராட்சி கிராமத்துக்கு – நகர பிதாவின் நடமாடும் சேவை

“நகராட்சி கிராமத்துக்கு – நகர பிதாவின் நடமாடும் சேவை” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாகால மற்றும் வெளிஹிந்த பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை நடைமுறைப்படுத்துதல் 2019.01.12 ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வில்,

  • இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடிகளை வழங்குதல்
  • நீர்வெறுப்பு நோயினை இல்லாதொழிப்பதற்கு நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றுதல்
  • நிலுவை வீத வரியினை தண்டப் பணத்தை செலுத்தாமல் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குதல்
  • பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளுக்கான வவுச்சர்களை வழங்குதல்
  • நூலகச் சேவைகளை வழங்குதல் ” வீதி விளக்குகளை திருத்துதல்
  • சுதேச மருத்துவம் மற்றும் மேற்கத்திய மருத்துவம் சார்ந்த கிளினிக்குகளை நடாத்துதல்
  • விசேட பெண் நோயியல் பரிசோதனைகளை நடாத்துதல்
  • இலவச சட்ட ஆலோசனைகளை வழங்குதல்
  • கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு பொதிகளை வழங்குதல்
  • சலுகை விலையில் கூட்டு பசளை தொட்டிகளையும் உரத்தையும் வழங்குதல், போன்ற பல சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.