அத்துருகிரிய- இரண்டு நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டங்கள்

கடுவெல மாநகரசபையின் அத்துருகிரிய மாவட்ட அலுவலகத்தினால் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி சனிக்கிழமை ஹொரஹேன சனசமூக நிலையத்திலும் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி சனிக்கிழமை மல்வத்த வீதியிலுள்ள சேவை நிலையத்திலும் கௌரவ நகர பிதா புத்திக துஷார ஜயவிலால் அவர்களின் தலைமையில் கௌரவ நகர சபை உறுப்பினர் மனோஜ் பெத்மஹே அவர்களின் முழுமையான பங்களிப்பு மற்றும் ஏற்பாட்டின் கீழ் நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அன்றைய தினம் வீத வரி, திட்டங்கள், சுதேச மருத்துவம், நூலகம், வீதி விளக்கு பராமரிப்பு, குப்பைக் கூளங்களை சேகரித்தல் போன்ற சேவைகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.